Tuesday, April 13, 2021

வாழ்க்கைப் பாதை

மவுனம் கலைந்து விட்டால்

மனதில் தெளிவு பிறந்து விடும்.

மனக்கதவைத் திறந்து வைத்தால்

மனக்கவலை மறைந்து விடும்.

 வாழ்க்கைப் பாதை, ஒரு அழகிய

விடுகதை பாடல்.

வாழும் வரையில்

விடை தெரியாத் தேடல் - கிடைத்த

விடையும் பலமுறை

விடுகதையாய் தோன்ற,

வாழ்க்கை பாதை பல முறை மாறும்.

வரும் மாற்றம் புரிந்து கொண்டால்,
வசந்த கால மலராய்

வாழ்க்கை என்றும் தொடரும்.

வாழும் பொழுது இனிமை பிறகும்.

கிருஷ்ணன்.

Friday, March 20, 2020

ஆசை

ஆசை

ஆசை
அதன் மீது எல்லோருக்கும் ஆசை

ஆசை இல்லாத மனிதன் என்றும்
அரை மனிதன்...

அரும்புக்கும் ஆசை உண்டு
அழகிய மலராய் மலர

உன் விழிக்கும் ஆசை உண்டு
சிலமுறை விடியலைக் காண

உன் இதழுக்கும் ஆசை உண்டு
பல முறை சிரித்துப் பார்க்க

முதுமைக்கும் ஆசை உண்டு
ஒரு முறை இளமைக்குத் திரும்ப

ஆசை துறப்பது துறவு என்றால்....
அந்த துறவிக்கு ஆசை உண்டு தன்
ஆசையைத் துறக்க

ஆசைக்கு அளவில்லை..
அளவிருந்தால் அது ஆசை இல்லை

அலை இல்லாத கடல் இல்லை 
ஆசை இல்லாத மனமும்
இல்லை...

ஆசைப் படு...

Thursday, March 19, 2020

எது அழகு

எது அழகு

கடல் அழகா அதில் உதிக்கும் கதிர் அழகா
கதிர் அழகா அது உருவாக்கும் முகில் அழகா
முகில் அழகா அது பொழியும் மழை அழகா
மழை அழகா அது  விழுந்தோடும் நதி அழகா
நதி அழகா அதில் துளிர் விட்ட அரும்பழகா
அரும்பழகா அது கொண்ட நிறம் அழகா
நிறம் அழகா அது கொண்ட மலர் அழகா
மலர் அழகா அது கொண்ட மது அழகா
மது அழகா அதன் மயக்கும் சுவை அழகா
சுவை அழகா அதை நாடும் மனம் அழகா
மனம் அழகா அதன் தாவும் குணம் அழகா
குணம் அழகா அது கொண்ட மனிதன் அழகா
மனிதன் அழகா அவன் விட்டுச் செல்லும் சுவடழகா
சுவடழகா அது படிந்த கரை அழகா
கரை அழகா கதிர் உறங்கும் அந்தக் கடல் அழகா …..

நாம் காணும் இந்த இயற்கை அழகா...
இல்லை இயற்கை அழகை வர்ணிக்கும்...
நம் தமிழ் மொழி அழகா?

எது அழகு?